கரூர்
ரெங்கமலை மல்லீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்
|அரவக்குறிச்சி அருேக ரெங்கமலை மல்லீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ெரங்கமலை. இந்த மலையின் உச்சியில் பழமை வாய்ந்த மல்லீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேேபால் இந்தாண்டும் கொண்டாடப்பட்டது. இதையடுத்து மல்லீஸ்வரருக்கு பால், பழம், விபூதி சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை 6 மணி முதலே பக்தர்கள் கூட்டம், கூட்டமாக ெரங்கமலைக்கு புறப்பட்டு வந்தனர். பின்னர் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் மலையில் நடந்து சென்று மல்லீஸ்வரரை பயபக்தியுடன் வழிபட்டனர்.
பக்தர்கள் வசதிக்காக வழி நெடுகிலும் கோவில் நிர்வாகம் சார்பில் காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்தமிழ்ச்செல்வன் தலைமையில், போலீசார் மற்றும் மாவட்ட வன அலுவலர்கள் செய்திருந்தனர்.
நொய்யல்-தோகைமலை
திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரி உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல் கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன், சேமங்கி, நொய்யல், அத்திப்பாளையம் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
தோகைமலை அருகே உள்ள விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. மேலவெளியூர், வெள்ளப்பட்டி பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
லாலாபேட்டை
லாலாபேட்டை கடைவீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அம்மனுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல் கோவில் வளாகத்தில் முருகன் ராஜ அலங்காரத்திலும், மயில் வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.