< Back
மாநில செய்திகள்
கொளஞ்சியப்பர் கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு
கடலூர்
மாநில செய்திகள்

கொளஞ்சியப்பர் கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு

தினத்தந்தி
|
10 Aug 2023 1:42 AM IST

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. நேற்று ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு சித்தி விநாயகர், கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, நெய்தீபம் ஏற்றி வழிப்பட்டனர். மேலும் விருத்தாசலம் மணிமுத்தாற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் செய்திகள்