< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆடி கிருத்திகை: ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
|9 Aug 2023 8:29 AM IST
ஆடி கிருத்திகையை ஒட்டி ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை,
தமிழகத்தில் ஆடி கிருத்திகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) அன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ரத்தினகிரி பாலமுருகன் கோவில் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோவில் மற்றும் இதர முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.