< Back
மாநில செய்திகள்
முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா
விழுப்புரம்
மாநில செய்திகள்

முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா

தினத்தந்தி
|
9 Aug 2023 6:45 PM GMT

மயிலம் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலம்,

திண்டிவனம் அருகே மயிலத்தில் உள்ள மயில் வடிவ மலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு முதல் கால அபிஷேக ஆராதனை நடந்தது.

பின்னர் மாலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முருக பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் முருக பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலைவள வரும் காட்சி நடந்தது.

நேர்த்திக்கடன்

முன்னதாக திரளான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மயிலத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாக்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டசிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்