< Back
மாநில செய்திகள்
சிங்கார காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

சிங்கார காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா

தினத்தந்தி
|
2 Aug 2023 12:15 AM IST

சிக்கல்சிங்கார காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்தது.

சிக்கல்:

நாகை அருகே சிக்கல் சிங்கார காளியம்மன் கோவில் ஆடி திருவிழா கடந்த 28-ந்தேதி பூச்சொரிதல் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் துர்க்கை அம்மன் புறப்பாடு நடந்தது. நேற்று காலை சிங்கார காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு படுகளம் செல்லும் நிகழ்ச்சியும், வீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் வருகிற 5-ந்தேதி (சனிக்கிழமை) இரவு அம்மனுக்கு வெள்ளை உடுத்தி திருநடனத்துடன் கோவிலுக்குள் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்