< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
முத்தாநந்த சக்தி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா
|25 July 2022 1:04 AM IST
பண்ருட்டி தாலுகா முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஸ்ரீ முத்தாநந்த சக்தி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது.
பண்ருட்டி,
பண்ருட்டி தாலுகா முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஸ்ரீ முத்தாநந்த சக்தி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, அபிஷேகம் செய்தனர். மேலும், அம்மனை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தி தேர், ஆட்டோ, டாட்டா ஏசி, வேன், ஜே.சி.பி. உள்ளிட்ட எந்திரங்களை முதுகில் அலகு குத்தி கோவிலுக்கு இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் மற்றும் இளைஞர்களுடன், கிராம நாட்டாமைகள் ஆகியோர் செய்து இருந்தனர்.