< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
குதிரை வாகனத்தில் முத்து மாரியம்மன் வீதி உலா
|27 July 2022 5:21 PM IST
குதிரை வாகனத்தில் முத்து மாரியம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தென்னடார் ஊராட்சியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடந்து வந்தது. இதன் நிறைவு நாளான இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் முத்துமாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மஞ்சள் விளையாட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.