< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
மழைமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா
|11 Aug 2023 12:30 AM IST
மழைமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கொண்டாடப்பட்டது.
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள ஆயக்காரன்புலம் ஒன்று, இரண்டாம் சேத்தி கிராமங்களுக்கு பொதுவாக அமைந்துள்ள மழைமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் மாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும், பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடந்தது. இதைத்தொடர்ந்து மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.