< Back
மாநில செய்திகள்
ஆடி அமாவாசை திருவிழா: காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் குடில் அமைக்கும் பணி தீவிரம்
மாநில செய்திகள்

ஆடி அமாவாசை திருவிழா: காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் குடில் அமைக்கும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
24 July 2022 5:46 PM IST

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஆர்வமுடன் குடில் அமைத்து வருகின்றனர்.

விக்கிரமசிங்கபுரம்,

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற காரையார் செரிமுத்து அய்யனார் கோவிலில் வருகிற 28 -ந் தேதி ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற இருக்கிறது. இதில் தென்காசி, ஆலங்குளம், நெல்லை உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் குடில் அமைத்து வருகி்ன்றனர்.

இவர்கள் வரும் 30- ந் தேதி வரை இக்கோவிலில் தங்கி சாமி தரிசனம் செய்து வருவார்கள். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி, மணிமுத்தாறு பேரூராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அகஸ்தியர்பட்டியில் இருந்து கோவிலுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது, தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டு உளள்து.

மேலும் செய்திகள்