< Back
மாநில செய்திகள்
ஆதார் சிறப்பு முகாம்
தென்காசி
மாநில செய்திகள்

ஆதார் சிறப்பு முகாம்

தினத்தந்தி
|
25 Jan 2023 12:15 AM IST

ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது

பாவூர்சத்திரம்:

கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சுரேஷ் ஏற்பாட்டில், பாவூர்சத்திரம் தபால் நிலையம் சார்பில் கல்லூரணியில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது. குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் எடுத்தனர். மேலும் பலர் ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி, செல்போன் நம்பர் ஆகியவற்றை திருத்தம் செய்தனர்.

இந்த முகாமை பாவூர்சத்திரம் துணை அஞ்சலக அதிகாரி ஜெயக்குமார் முன்னிலையில், கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் தலைவி காவேரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அஞ்சலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். பிப்ரவரி 4-ந் தேதி வரை இதுபோன்ற ஆதார் சிறப்பு முகாம்கள் பல்வேறு ஊர்களில் நடத்த இருப்பதாக பாவூர்சத்திரம் துணை அஞ்சலக அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்