< Back
மாநில செய்திகள்
ஆதார், ரேஷன் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

ஆதார், ரேஷன் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்

தினத்தந்தி
|
23 Sept 2023 11:15 PM IST

ஆதார், ரேஷன் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என திருப்பத்தூர் மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.பெ.முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் இதுநாள் வரை ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், செல்போன் எண் ஆகிய விவரங்களை வழங்காத உறுப்பினர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் சமர்ப்பித்திட வேண்டும்.

மேலும் எதிர்வரும் கூட்டுறவு சங்கத் தேர்தலை முன்னிட்டு சங்கத்தில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே உரிய காலத்திற்குள் அளிக்க தவறும் பட்சத்தில் தங்களது பெயர் `அ' வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும்.

'அ' வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் தங்களால் வாக்களிக்க இயலாத நிலை மற்றும் அத்தேர்தலில் போட்டியிட இயலாத நிலை ஏற்படும். எனவே மேற்கண்ட வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது ஆதார் எண், குடும்ப அட்டை எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், செல்போன் எண் ஆகிய விவரங்களை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பித்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்