< Back
மாநில செய்திகள்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க    விழுப்புரம் மாவட்டத்தில்   4 - ந்தேதி  சிறப்பு முகாம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க விழுப்புரம் மாவட்டத்தில் 4 - ந்தேதி சிறப்பு முகாம்

தினத்தந்தி
|
2 Sep 2022 4:58 PM GMT

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க விழுப்புரம் மாவட்டத்தில் 4 ந்தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.


இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர், முதன்மை அரசு செயலாளர் அவர்களால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் (அல்லது) ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளதை கண்டறிவதற்கும் 1.8.2022 முதல் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திடும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 4 ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம் - 6பி பெற்று ஆதார் எண் அல்லது ஆதார் எண் இல்லையெனில் படிவத்தில் குறிப்பிட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை இணைத்து வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம். இவ்வாய்ப்பினை வாக்காளர்கள் தவறாமல் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்