< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
சிறை கைதிகளுக்கு ஆதார் - சிறைத்துறை டிஜிபி எடுத்த முடிவு

1 Dec 2022 9:57 PM IST
தமிழ்நாட்டில், சிறை கைதிகளுக்கு ஆதார் அட்டை பெற்றுதர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில், சிறை கைதிகளுக்கு ஆதார் அட்டை பெற்றுதர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைதிகள் சிறையில் இருந்து விடுதலையான பிறகு வேலை தேடுவதற்கும், வங்கியில் கடன் பெறவும் அடையாள அட்டை இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இதை உணா்ந்த சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி, கைதிகளுக்கு ஆதாா் அட்டை பெற்றுதரும் நடவடிக்கையில் ஈடுபட்டாா். இந்நிலையில், முதற்கட்டமாக திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகள் 300 பேருக்கு, ஆதார் அட்டை வழங்குவதற்காக கைரேகை, புகைப்படம் உள்ளிட்ட தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.