< Back
மாநில செய்திகள்
நண்பருக்காக நியாயம் கேட்க சென்ற இளைஞர் குத்திக் கொலை - ஓசூர் அருகே அதிர்ச்சி

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

நண்பருக்காக நியாயம் கேட்க சென்ற இளைஞர் குத்திக் கொலை - ஓசூர் அருகே அதிர்ச்சி

தினத்தந்தி
|
16 Jan 2024 7:09 AM IST

ஓசூர் அருகே நண்பரை தகாத வார்த்தையால் திட்டியவரை தட்டிக் கேட்ட இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார். இவருடைய நண்பர் மஞ்சுநாத். மஞ்சுநாத்தை எம்.காரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மதுபோதையில் தகாத வார்த்தைகளில் திட்டி சண்டைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதை மஞ்சுநாத் உதயகுமாரிடம் தெரிவிக்க, இருவரும் அந்த இளைஞரை தட்டிக்கேட்க சென்றுள்ளனர்.

இதில், இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், மஞ்சுநாத்தும், உதயகுமாரும் கத்தியால் குத்தி தாக்கப்பட்ட நிலையில், உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த மஞ்சுநாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதன் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்