திருச்சி
தொழிலாளியை கொலை செய்ய முயன்ற வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|தொழிலாளியை கொலை செய்ய முயன்ற வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருச்சி அரியமங்கலம் ஆயில் மில் ரோட்டில் நடந்து சென்ற ஒருவரை ஆபாசமாக திட்டியும், கத்தியை காட்டி மிரட்டியும் ரூ.1000-ஐ பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் யுவராஜ் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், யுவராஜ் மீது அரசு சேமிப்பு கிடங்கு சுமை தூக்கும் தொழிலாளியை கொலை செய்ய முயன்றதாக ஒரு வழக்கும், கஞ்சா விற்பனை செய்த ஒரு வழக்கும், திருட்டு மற்றும் பொதுமக்களை கத்தியை காட்டி அச்சுறுத்தி பணம் பறித்ததாக 3 வழக்குகளும் உள்பட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
மேலும் யுவராஜ் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவந்ததால், அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையின்படி யுவராஜை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் உள்ள யுவராஜிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகல் வழங்கப்பட்டது.