< Back
மாநில செய்திகள்
சாராயம் விற்ற வாலிபர் கைது
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சாராயம் விற்ற வாலிபர் கைது

தினத்தந்தி
|
20 Jan 2023 12:12 AM IST

சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, காரியானூர் செல்லியம்மன் கோவில் தெருவில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த செல்லதுரை மகன் ரமேசை(வயது 31) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 லிட்டர் 800 மில்லி பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் மோட்டார் சைக்கிள் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ மாவட்ட போலீஸ் அலுவலகத்தை 9498100690 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்