அரியலூர்
10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
10-ம் வகுப்பு மாணவி
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா, கூவத்தூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சின்னப்பராஜ். இவருடைய மகன் ஜான்பிரிட்டோ (வயது 24). இவர் 10-ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதையடுத்து அவர் மீது ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ஜான்பிரிட்டோ ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் கடந்த 5-ந்தேதி அடைக்கப்பட்டார்.
குண்டர் சட்டம்
இந்தநிலையில், ஜான்பிரிட்டோ மீது குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரின் பரிந்துரையின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஜான்பிரிட்டோவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜான் பிரிட்டோ நேற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்ததற்கான உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறை உயர் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.