< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு வலைவீச்சு
|9 Sept 2023 1:56 AM IST
ஒரத்தநாடு அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார்கோட்டையை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் பிரதீப்(வயது28). இவருக்கும், திருச்சியை சேர்ந்த பெண்ணுக்கும் ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.இந்த நிலையில் மணப்பெண்ணுக்கு 17 வயதுதான் ஆகிறது என்றும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய சமூக நல விரிவாக்க அலுவலர் ஜோதிலட்சுமி, ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை வலைவீசி தேடி வருகின்றனர்.