காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
|காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். அதே பகுதியில் குடிநீர் கேன் வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தில் கானா விலக்கு பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் (24 வயது) என்பவர், வேலை பார்த்து வந்தார்.
வீடுகளுக்கு குடிநீர் கேன் கொண்டு சென்றபோது, அந்த பிளஸ்-1 மாணவியுடன், முத்துராஜூவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். செல்போனிலும் அதிக நேரம் பேசி வந்துள்ளார். மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாணவி கர்ப்பம் அடைந்ததை அறிந்து, அவரது தாயார் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து மாணவியை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து மாணவியின் தாயார் எம்.ரெட்டியபட்டி போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பிணியாக்கியது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராஜை கைது செய்தனர்.