கள்ளக்குறிச்சி
கல்வராயன்மலையில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
|கல்வராயன்மலையில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலையில் உள்ள கிளாக்காடு அருகே வெங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் மகன் அண்ணாமலை(வயது 32). இவர் வெங்களூர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் தண்ணீர் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் சுமார் 20 கிலோ அளவிற்கு கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளார். இதுகுறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாமலையை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவருடைய குற்றச்செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ் பரிந்துரை செய்தார். அதன் பேரில் அண்ணாமலையை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து அண்ணாமலையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.