< Back
மாநில செய்திகள்
இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது
சேலம்
மாநில செய்திகள்

இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது

தினத்தந்தி
|
17 Sept 2023 1:00 AM IST

இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆத்தூர்:-

ஆத்தூர் உடையார்பாளையம் அண்ணா தெருவை சேர்ந்த முருகன் மகன் கேசவன் (வயது 23). தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர், இளம்பெண்ணிடம் தன்னை காதலிக்க வற்புறுத்தி செல்போன் மூலம் தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் வேதனை அடைந்த இளம்பெண் இதனை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தமிழ் நாதன் வழக்குப்பதிவு செய்து கேசவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்