திருச்சி
பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய வாலிபர் கைது
|பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விபசாரம்
திருச்சி உறையூர் ஏயுடி காலனி பகுதியில் விபசாரம் நடப்பதாக உறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள குடோன் அருகே சோதனை மேற்கொண்டதில், விபசாரம் நடப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய முகமதுஅசாருதீன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
சூதாடியவர்கள் கைது
*திருச்சி காந்திமார்க்கெட் ஜெயில்பேட்டை குடியிருப்பு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக நேற்று முன்தினம் காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பணம் வைத்து சூதாடிய வரகனேரியை சேர்ந்த கதிரவன் (38), அஜீத்குமார் (28), அமோஸ்ராஜ் (48), ரோசாரியோ சுரேஷ் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
*இதேபோல் ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக தமிழழகன், செந்தில், இ.பி.ரோடு சக்திநகர் பகுதியில் சூதாடிய யோகராஜ் (25), மலர்மன்னன் (30), ஜெயப்பிரகாஷ் (38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா விற்றவர்கள் சிக்கினர்
*திருச்சி ராம்ஜிநகர் மில்காலனி பகுதியில் கஞ்சா விற்ற லால்குடியை சேர்ந்த சூர்யபிரகாஷ்(23) என்பவரை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் திருச்சி திண்டுக்கல் சாலையில் ஒரு கல்லூரி அருகில் கஞ்சா விற்ற லால்குடியை சேர்ந்த மனோஜ் பாரத் (23) என்பவரை கைது செய்து, 80 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.