< Back
மாநில செய்திகள்
சுங்குவார்சத்திரம் அருகே வீடு புகுந்து கொள்ளையடித்த வாலிபர் போலீசில் ஒப்படைப்பு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

சுங்குவார்சத்திரம் அருகே வீடு புகுந்து கொள்ளையடித்த வாலிபர் போலீசில் ஒப்படைப்பு

தினத்தந்தி
|
29 July 2022 1:48 PM IST

சுங்குவார்சத்திரம் அருகே வீடு புகுந்து கொள்ளையடித்த வாலிபர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த பொடவூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 47). இவர் தனது மனைவியுடன் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவை பூட்டாமல் தாழ்ப்பாள் மட்டும் போட்டு விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருப்பதையும் உள்ளே மர்ம நபர் யாரோ இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது மர்ம நபர் வீட்டில் இருந்த தங்க நகை, மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து செல்வதை பார்த்து கூச்சலிட்டனர்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த கொள்ளையனை மடக்கி பிடித்து சுங்குவார்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் பரந்தாமன் விசாரணை செய்ததில் கொள்ளையில் ஈடுபட்டவர் ஆவடி வீராபுரம் பகுதியை சேர்ந்த தனுஷ் (23) என்பதும் அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, பகலில் வீடு புகுந்து கொள்ளையடிப்பது உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பது தெரியவந்தது. போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்