< Back
மாநில செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வாலிபர் கைது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வாலிபர் கைது

தினத்தந்தி
|
25 Aug 2023 3:19 PM IST

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 40). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலி கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் ராஜாமணி கடந்த 7-ந்தேதி தன்னுடைய குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று திருப்பி வந்து பார்க்கும் போது வீட்டின் பூட்டு உடைக்க பட்டு 26½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.. இது குறித்து ராஜாமணி ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்தார். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்ரண்டு சந்திரதாஸ் மேற்பார்வையில் ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப் பதிவு செய்து தனி படை அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர். நகை திருட்டில் ஈடுபட்டது திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ராஜிவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்த பிரேம் குமார் (31) என்பது தெரிய வந்தது. இதையடுத்து திருவண்ணாமலை அருகே பதுங்கி இருந்த பிரேம்குமாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 26½ பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்