பெரம்பலூர்
பெண்ணிடம் பணப்பை பறித்துசென்ற வாலிபர் கைது
|பெண்ணிடம் பணப்பை பறித்துசென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூரை அடுத்த வடக்குமாதவி சாலையில் உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த பெரியசாமி. இவரது மனைவி பாப்பாத்தி(வயது55). இவர் நேற்று பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தாலுகா அலுவலக சாலையில் உள்ள கடைகளை தூய்மை செய்யும் வேலை செய்துவந்தார். இந்தநிலையில் தினசரி மார்க்கெட்டில் மதியம் காய்கறி வாங்கினார். அப்போது தனது கைபையை கீழே வைத்துவிட்டு காய்கறி வாங்கியபின்பு பார்த்தபோது, ஒரு வாலிபர் அந்த கைபையை எடுத்துக்கொண்டு தப்பிஓட முயன்றார். அதைப்பார்த்த பாப்பாத்தி சத்தம் போட்டார். உடனே அங்கிருந்தவர்கள், அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து பெரம்பலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட அந்த வாலிபர் கல்பாடி எறையசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த கண்ணன மகன் கோவிந்தராஜ் (21) என்பது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்து கைபையுடன் திருடி சென்ற ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். கைதான கோவிந்தராஜ் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.