< Back
மாநில செய்திகள்
பொத்தேரி ரயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

பொத்தேரி ரயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
20 Dec 2022 4:07 PM IST

பொத்தேரி ரயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள நாட்டரசன்பட்டு துலுக்காத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமுவேல் (வயது 21), இவர் பொத்தேரி ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்கு உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ராமுவேல் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் காவனூர் வழியாக மணிமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த மணிமங்கலம் போலீசார் சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் பொத்தேரி ரெயில் நிலையம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடியதை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து அந்த வாலிபரை மணிமங்கலம் போலீசார் மறைமலைநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரித்த போது படப்பை அருகே உள்ள சிறுமாத்தூர் கிராமத்தை சேர்ந்த பூமணி என்கிற பூபாலன் (வயது 36) என்பது தெரிய வந்தது. இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்