< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது

தினத்தந்தி
|
27 Oct 2023 12:15 AM IST

கீழ்வேளூர் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது

சிக்கல்:

கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் கீழ்வேளூர்-ஒர்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகை அருகே உள்ள பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தானிருப்பு கிராமம், காலனி தெருவை சேர்ந்த செங்குட்டுவன் மகன் சஞ்சய் (வயது 20) என்பதும் இவர் காரைக்கால் வாஞ்சூர் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கீழ்வேளூர் போலீசார் சஞ்சையை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்