< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் மதுவிற்ற வாலிபர் கைது
|10 July 2023 12:15 AM IST
சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் மதுவிற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் பகுதியில் மதுபாட்டில்களை சிலர் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் நேற்று சாத்தான்குளம் அருகே அமுதுண்ணாகுடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தோட்டம் ஒன்றில் ஒருவர் மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் இட்டமொழியை சேர்ந்த சந்திரன் மகன் கிங்ஸ்டன்(வயது 30). அந்த தோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுல் விலைக்கு விற்று வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.