சென்னை
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்த வாலிபர் கைது
|சென்னை ஓட்டேரியில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஓட்டேரி கொசப்பேட்டை எட்வர்ட் பார்க் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் மீது அடிதடி, வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. ஓட்டேரி போலீசில் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், பல்வேறு வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ்குமார் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில், புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் கடந்த 2018-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் சதீஷ்குமார் தலைமறைவானார். பல்வேறு வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை தனிப்படை இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜானி செல்லப்பா ஆகியோர் தேடி வந்தனர். இந்நிலையில் அல்லிக்குளம் மகளிர் நீதிமன்றத்தில் சதீஷ்குமார் மீது பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.