< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மின்பழுதை சரி செய்ய டிரான்ஸ்பார்மரில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி பலி
|24 Aug 2023 11:46 PM IST
ஜோலார்பேட்டை அருகே மின்பழுதை சரி செய்ய டிரான்ஸ்பார்மரில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மின்பழுதை சரி செய்ய டிரான்ஸ்பார்மரில் ஏறிய ராகுல் என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டிரான்ஸ்பார்மரில் ஏறச் சொன்ன நபரின் வீட்டை ராகுலின் உறவினர்கள் அடித்து துவம்சம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.