< Back
மாநில செய்திகள்
போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
மாநில செய்திகள்

போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

தினத்தந்தி
|
20 March 2024 10:01 PM IST

போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞரை அவரது பெற்றோர் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில், போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர், திடீரென ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு வீர ராகவபுரத்தை சேர்ந்தவர் தனுஷ். 20 வயதான இவர், கஞ்சா மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால், குன்றத்தூர் அடுத்த பல்லாவரம் சாலையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞரை அவரது பெற்றோர் சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில், அங்குள்ள அறையின் ஜன்னல் கம்பியில் இளைஞர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே, மையத்தில் இருந்த ஊழியர்கள் இளைஞரின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞரின் இந்த தற்கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்