< Back
மாநில செய்திகள்
ஸ்ரீமுஷ்ணம் அருகே   காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
கடலூர்
மாநில செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

தினத்தந்தி
|
15 Oct 2023 1:07 AM IST

ஸ்ரீமுஷ்ணம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.


தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகள் தாவுதியா (வயது 24). இவரும், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வடக்குபாளையத்தை சேர்ந்த மரிக்கொழுந்து என்பவரும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 3 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தாவுதியா, தனது வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தாவுதியா பாிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தாவுதியாவின் தாய் அமுதா தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக சோழத்தரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமை காரணமாக தாவுதியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து சிதம்பரம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்