< Back
மாநில செய்திகள்
மதுபோதையில் பேருந்து நிலையம் அருகே படுத்துக்கிடந்த இளம்பெண்ணால் பரபரப்பு
மாநில செய்திகள்

மதுபோதையில் பேருந்து நிலையம் அருகே படுத்துக்கிடந்த இளம்பெண்ணால் பரபரப்பு

தினத்தந்தி
|
13 Aug 2024 6:55 PM IST

பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்தும் போதை தெளியவில்லை.

கோவை,

கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மயங்கியநிலையில் படுத்துக்கிடந்தார். அவர் இறந்துதான் கிடக்கிறாரா என்று அப்பகுதியில் சென்று வந்த பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து அவரின் அருகே சென்று பார்த்தனர்.

அப்போது அந்த இளம்பெண் பட்டப்பகலில் அதிக அளவு மது அருந்தி போதை தலைக்கேறிய நிலையில் சாலையோரம் படுத்துக்கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு காட்டூர் போலீசார், பொதுமக்கள் திரண்டனர்.

பின்னர் அவர்கள் அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்தும் போதை தெளியவில்லை. பின்னர் ஒருவழியாக எழுந்த அந்த பெண் தன்னைச்சுற்றி ஏன் இத்தனைபேர் நிற்கிறார்கள் என்று எண்ணியவாறு அங்கு இருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்