< Back
மாநில செய்திகள்
கோவில்பட்டியில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கோவில்பட்டியில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

தினத்தந்தி
|
29 Sept 2023 12:15 AM IST

கோவில்பட்டியில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி(மேற்கு):

கோவில்பட்டி ஏ. கே. எஸ்.தியேட்டர் ரோடு வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் குமார் மனைவி முத்துமாரி. இவரது மகள் சரண்யா (வயது 28). இவருக்கும் வ. உ.சி. நகர் 1-வது தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் மாரிமுத்துக்கும் 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சிவகாசியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் மாரிமுத்துவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு மன்பு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதில் சரண்யா மனமுடைந்து காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து முத்துமாரி அளித்த புகாரின் பேரில், மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்