< Back
மாநில செய்திகள்
திருமணம் நடந்த ஒரு மாதத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண்
மதுரை
மாநில செய்திகள்

திருமணம் நடந்த ஒரு மாதத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண்

தினத்தந்தி
|
29 Jun 2022 1:55 AM IST

மேலூர் அருகே திருமணம் நடந்த ஒரு மாதத்தில் தூக்கில் இளம்பெண் பிணமாக தொங்கினார்.

மேலூர்,

மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் மாயூரான் (வயது 26). இவர் திருவாதவூரை சேர்ந்த அய்யனார் என்பவரது மகள் சிவரஞ்சனி (24) என்பவரை காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு பின் இலங்கை அகதிகள் முகாமில் மாயூரானும் சிவரஞ்சனியும் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிவரஞ்சனி அவரது தந்தை அய்யனாருடன் திருவாதவூருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டில் சிவரஞ்சனி தூக்கில் பிணமாக தொங்கினார். மகள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் அவர் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே. தனது மனைவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாயூரான் மேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆர்.டி.ஓ.விசாரணைக்காக சிவரஞ்சனியின் உடல் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேக மரணம் என்று மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணம் நடந்த ஒரு மாதத்தில் இளம்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

==========

Related Tags :
மேலும் செய்திகள்