< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
திருமணமாகி 9 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் இளம்பெண் தற்கொலை
|5 Nov 2022 9:14 AM IST
வியாசர்பாடியில் திருமணமாகி 9 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வியாசர்பாடி பெரியார் நகர் கே.வி.கே.சாமி தெருவில் வசித்து வருபவர் விவேக். இவருடைய மனைவி கவிதா (வயது 30). இவர்களுக்கு திருமணம் ஆகி 9 வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினமும் இருவருக்கும் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த கவிதா, கணவர் வேலைக்குச்சென்ற பிறகு வீட்டின் படுக்கை அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.