< Back
மாநில செய்திகள்
சூதாட்டத்திற்காக கடன் வாங்கிய இளைஞரை கல்லாலே அடித்து கொன்ற கொடூரம்
மாநில செய்திகள்

சூதாட்டத்திற்காக கடன் வாங்கிய இளைஞரை கல்லாலே அடித்து கொன்ற கொடூரம்

தினத்தந்தி
|
18 Aug 2023 11:11 PM IST

கோவையில் ஐபிஎல் சூதாட்டத்திற்கு வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காத இளைஞர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை,

கோவையில் ஐபிஎல் சூதாட்டத்திற்கு வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காத இளைஞர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொள்ளாச்சியை சேர்ந்தவர் அருண் கார்த்திக். கடந்த 10-ந்தேதி அருண் கார்த்திக்கை காணவில்லை என்று அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். அருண் கார்த்திக்கின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்த போலீசார், அவரது நண்பர்கள் சூரிய பிரகாஷ் மற்றும் அரவிந்த் ஆகிய இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது இருவரும் அருண் கார்த்திக்குடன் சேர்ந்து ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் இதற்காக சூரிய பிரகாசிடம் இருந்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை அருண் கார்த்திக் கடனாக வாங்கியதும் தெரிய வந்தது. வாங்கிய பணத்தை திருப்பி கேட்ட போது ஏற்பட்ட தகராறில் இருவரும் சேர்ந்து அருண் கார்த்திக்கை கல்லால் அடித்துக் கொன்றுள்ளனர்.

பின்னர் சடலத்தை சந்திராபுரம் கல்குவாரியில் புதைத்தனர். சம்பவ இடத்திலிருந்து இளைஞரின் சடலத்தை மீட்ட போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்