< Back
மாநில செய்திகள்
கூவம் ஆற்றில் குதித்து நீச்சல் அடிக்கும் இளைஞர்...! மீட்க போராடும் போலீசார்....!
மாநில செய்திகள்

கூவம் ஆற்றில் குதித்து நீச்சல் அடிக்கும் இளைஞர்...! மீட்க போராடும் போலீசார்....!

தினத்தந்தி
|
6 Feb 2023 6:01 PM IST

சென்னையில் கூவம் ஆற்றில் குதித்து நீச்சல் அடிக்கும் இளைஞரை தீயணைப்பு வீரர்கள் மீட்க போராடி வருகின்றனர்.

சென்னை,

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் வேலா. இவர் எழுப்பூர் பகுதியில் செல்லக்கூடிய கூவம் ஆற்றில் குதித்து நீச்சல் அடிக்க தொடங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடம்வந்த அவர்கள் கூவம் ஆற்றில் நீச்சல் அடிக்கும் இளைஞரை மீட்க முயன்றனர்.

ஆனால் அவர் தொடர்ந்து நீச்சல் அடித்து முன்னேரிக் கொண்டு செல்வதால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் சேறு நிறைந்த பகுதிகளில் நீச்சலடித்து செல்வதால் படகில் சென்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்க முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.

இறுதியில் வேலா நீச்சல் அடித்துக் கொண்டே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கடந்து சிந்தாதிரிப்பேட்டை வந்துள்ளார். மேலும், இளைஞர் வேலா போதையில் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் கூவம் ஆற்றில் நீச்சல் அடித்து கொண்டு முன்னேறும் வேலாவை மீட்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்