முதலிரவில் மனைவியிடம் அடம்பிடித்த வாலிபர்... மணமகள் எடுத்த அதிரடி முடிவு
|வீட்டிற்கு வந்த மருமகளிடம் மாமனார்-மாமியார் வரதட்சணை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
குமரி ,
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகள் ஸ்டெர்லின்(வயது24). இவருக்கும், காட்டாத்துறை கடமனாங்குழியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான பிரவீன் சூர்யா(28) என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது ஸ்டெர்லினின் தந்தை சந்திரசேகரின் பெயரில் உள்ள வீடு மற்றும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மாப்பிள்ளைக்கு சீர்வரிசையாக கொடுப்பதாக கூறியுள்ளனர்.
ஆனால், திருமணத்தின்போது கூறியபடி வீடும், மோட்டார் சைக்கிளும் கொடுக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. எனினும் திருமணம் நல்லபடியாக முடிந்தது. முதலிரவன்று பிரவீன் சூர்யா, மனைவி ஸ்டெர்லினிடம் தனக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கித் தரவேண்டும் என்றும் வீட்டை தனது பேரில் எழுதி தருமாறும் கேட்டு அடம் பிடித்துள்ளார்.
இதைதொடர்ந்து பிரவீன் சூர்யாவுடன் சேர்ந்து கொல்வேல் பகுதியை சேர்ந்த பிரியா, பிரவீன் சூர்யாவின் தந்தை ஜான் ராஜசெல்வன்(58), தாயார் கனகராணி(52), சகோதரர் பிரபின் சூர்யா(30), அவரது மனைவி ஜெனி ஆகியோரும் வரதட்சணை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
அவர்களின் தொல்லை தாங்காமல் கணவர் பிரவீன் சூர்யா, அவரது தந்தை மற்றும் உறவினர்கள் மீது ஸ்டெர்லின் கொடுத்த புகாரின்பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.