< Back
மாநில செய்திகள்
ஓமலூர் பஸ் நிலையத்தில் வாலிபர் தாக்கப்பட்டதால் பரபரப்பு
சேலம்
மாநில செய்திகள்

ஓமலூர் பஸ் நிலையத்தில் வாலிபர் தாக்கப்பட்டதால் பரபரப்பு

தினத்தந்தி
|
1 July 2023 2:38 AM IST

ஓமலூர் பஸ் நிலையத்தில் வாலிபர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர்:

ஓமலூர் பஸ் நிலையம்

ஓமலூர் பஸ் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆட்டோ ஸ்டாண்டுக்கு ஆட்டோவிலேயே 2 வாலிபர்கள் மதுபோதையில் வந்துள்ளனர். அப்போது திடீரென அங்கிருந்த ஆட்டோ டிரைவரை, 2 வாலிபர்கள் கடுமையாக தாக்கியதுடன், மதுபாட்டிலால் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கிருந்த மற்ற ஆட்டோ டிரைவர்கள், அந்த 2 வாலிபர்களையும் பிடித்து தாக்க தொடங்கினர். ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொருவரை அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்கினர். இதனால் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பரபரப்பு

ஆட்டோ டிரைவர்களிடம் சிக்கிய நபர், தன்னை விட்டு விடும்படி கையெடுத்து கும்பிட்டார்.

அப்படி இருந்தும் அந்த நபரை தாக்கினார்கள். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே அந்த நபரை தாக்கியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அடிபட்ட நபரும் அங்கிருந்து தப்பி சென்றார். தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர்.

அங்கு யாரும் இல்லை. இதை தொடர்ந்து மேலும் தாக்குதல் சம்பவம் நடக்கலாம் என சந்தேகித்த போலீசார் பஸ் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதற்கிடையே இந்த தாக்குதுல் சம்பவங்களை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்