< Back
மாநில செய்திகள்
வெல்டிங் பணியின்போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
சென்னை
மாநில செய்திகள்

வெல்டிங் பணியின்போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

தினத்தந்தி
|
26 Jun 2022 7:19 AM IST

திருவேற்காடு அருகே வெல்டிங் பணியின்போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 26). இவர், திருவேற்காடு அடுத்த புளியம்பேடு பகுதியில் உள்ள வெல்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று பாலமுருகன், வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.

உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பாலமுருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்