கள்ளக்குறிச்சி
தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்
|சங்கராபுரம் அருகே தூக்கில் வாலிபர் பிணமாக தொங்கினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே பவுஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 60). இவரது மகன் சோஷில் (23). இவர் திருவண்ணாமலை மாவட்டம் நாராயணகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஷபி மகள் ஜமிலாபானு (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சங்கராபுரத்தில் உள்ள தியாகராஜபுரம் சாலையில் சோஷில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டில் சோஷில் தூக்கில் பிணமாக தொங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஷாஜகான் சங்கராபுரம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் எனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது. மேலும் தகவல் அறிந்து நான் வருவதற்குள் எனது மகனின் உடலை புதைத்து விட்டனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார். இதையடுத்து மர்மமான முறையில் சோஷில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.