விழுப்புரம்
பணி நிமித்தமாக சென்னை சென்ற பட்டதாரி வாலிபர் திடீர் மாயம்
|பணி நிமித்தமாக சென்னை சென்ற பட்டதாரி வாலிபர் திடீர் மாயம் போலீசார் தீவிர விசாரணை
பிரம்மதேசம்
பிரம்மதேசம் அருகே உள்ள ஆலங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் மகன் விஜயகுமார்(வயது 35). பட்டதாரியான இவருக்கு திருமணமாகி சீதா (30) என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு வயதில் மகன் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் விஜயகுமார் தனியார் நிறுவனம் மற்றும் வங்கியில் அவுட்சோர்சிங் முறையில் பணிகளை எடுத்து செய்து வந்தார். இதற்காக சொந்த ஊரில் இருந்து சென்னை வந்து சில நாட்கள் தங்கி பணி செய்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம். அதன்படி சொந்த ஊருக்கு வந்த விஜயகுமார் கடந்த 17-ந் தேதி சென்னைக்கு புறப்பட்டு சென்றார். தினமும் குறைந்தது 2 முறையாவது அவர் தனது மனைவியிடம் செல்போனில் பேசுவார். கடைசியாக கடந்த 25-ந் தேதி மாலை 3.30 மணியளவில் செல்போனில் பேசியுள்ளார். அதன் பிறகு அவரது மனைவி விஜயகுமாரை செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. அதன் பிறகு அவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் யாரிடமும் தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும் சென்னையில் உள்ள விஜயகுமாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அவரை தொடர்பு கொள்ள முயன்றும் தகவல் எதுவும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த சீதா இது குறித்து பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.