< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
கடற்கரை பகுதியில் ஆண் நண்பர்களுடன் உல்லாசத்தில் இருந்த இளம்பெண்...! தட்டிகேட்ட பொதுமக்களை தாக்கிய சம்பவம் வைரல்...!

11 Aug 2023 8:33 PM IST
கன்னியாகுமரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்களுடன் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் தனிமையில் இருந்ததை கண்ட ஊர்மக்கள் அவர்களை பிடிக்க முயலும் போது வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
கொல்லங்கோடு,
கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்களுடன் ஆள்நடமாட்டம் இல்லாத கடலோர பகுதியான இடப்பாடு பகுதிக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர் இதனை கண்ட அந்த பகுதியை சேர்ந்த ஊர்மக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போது கஞ்சா போதையில் காணப்பட்ட இளைஞர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அவர்களோடு சேர்ந்து இளம்பெண்ணும் வாக்குவாதத்தில் ஈடுபட சுற்றி இருந்தவர்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர் இதனை கண்ட அந்த பெண் வீடியோ எடுப்பவர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார் இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வரும் நிலையில் இளம் சமுதாயத்தினர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இது போன்று வாழ்க்கையை இழந்து பரிதவிக்கும் அவலத்திற்கு ஆளாகி வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.