திருவள்ளூர்
பள்ளிப்பட்டு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|பள்ளிப்பட்டு அருகே பெற்றோர் வேலைக்கு செல்லும்படி கூறியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிப்பட்டு ஆஞ்சநேயர் நகரில் வசித்து வருபவர் இஸ்ரேல் (வயது 45). இவர் பள்ளிப்பட்டு அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுனிதா (38). இவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்று வருகிறார். இவர்களுக்கு ஐஸ்வர்யா (22), சௌந்தர்யா (18) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். சௌந்தர்யா டிப்ளமோ கேட்டரிங் படித்துள்ளார். சௌந்தர்யாவை வேலைக்கு செல்லுபடி பெற்றோர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த சௌந்தர்யா வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அறைக்கு சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது தந்தை கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது சௌந்தர்யா தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.