செங்கல்பட்டு
மறைமலைநகர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|மறைமலைநகர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட களிவந்தபட்டு கிராமத்தில் உள்ள இருளர் தெருவை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது 20), இவர் கன்னிவாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்தம்மாள் வீட்டில் இரவு சாப்பிட்ட பிறகு செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிய பிறகு வீட்டின் எதிரே உள்ள வேப்ப மரத்தில் முத்தம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் இதை பார்த்த உறவினர்கள் உடனடியாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முத்தம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தம்மாள் எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.