< Back
மாநில செய்திகள்
பூச்சி மருந்து அடிக்க சென்ற வீட்டில் 22 பவுன் நகை திருடிய தொழிலாளி கையும் களவுமாக பிடித்த உரிமையாளர்
சென்னை
மாநில செய்திகள்

பூச்சி மருந்து அடிக்க சென்ற வீட்டில் 22 பவுன் நகை திருடிய தொழிலாளி கையும் களவுமாக பிடித்த உரிமையாளர்

தினத்தந்தி
|
13 July 2023 1:19 PM IST

பூச்சி மருமத்து அடிக்க சென்ற வீட்டில திருடிய தொழிலாளியை கையும் களவுமாக உரிமையாளர் பிடித்தார் .

சென்னையை அடுத்த மாதவரம் பொன்னியம்மன் மேடு திருமலை நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சாலமன். இவரது வீட்டில் கரப்பான் பூச்சி அதிகம் இருந்ததால் மருந்து அடிக்கும் தனியார் கம்பெனியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தார். அந்த நிறுவனம் சென்னை ராயபுரம் எஸ்.எம்.செட்டி தெருவை சேர்ந்த சிவகுமார்(வயது 45) என்பவரை பூச்சி மருந்து அடிக்க அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

அதன்படி சாலமன் வீட்டில் பூச்சி மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்ட சிவகுமார், திடீரென டீ சாப்பிட்டு விட்டு வருவதாக கூறி அங்கிருந்து செல்ல முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த சாலமன், அவரை சோதனை செய்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 22 பவுன் நகையை திருடி அவரது பேண்ட் பையில் மறைத்து வைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவரை கையும் களவுமாக பிடித்து மாதவரம் போலீசில் ஒப்படைத்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் சிவகுமாரை கைது செய்து அவரிடமிருந்து 22 பவுன் நகையை பறிமுதல் செய்தார். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்