< Back
மாநில செய்திகள்

கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
சம்பள பாக்கியை கேட்ட தொழிலாளிக்கு அடி-உதை

26 Sept 2023 1:15 AM IST
சம்பள பாக்கியை கேட்ட தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சாய்பாபாகாலனி
கோவை கோவில்மேடு நல்லம்மாள் வீதியை சேர்ந்தவர் மித்திலேஷ் (வயது 32). இவர் அந்த பகுதியை சேர்ந்த ராம் என்பவரிடம் டைல்ஸ் ஓட்டும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவருக்கான சம்பள பணம் ரூ.40 ஆயிரத்தை கொடுக்காமல் ராம் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று மித்திலேஷ் வீட்டிற்கு ராம் தனது நண்பர்களுடன் சென்று, அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து மித்திலேஷ் சாய்பாபாகாலனி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் ராம் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.