< Back
மாநில செய்திகள்
முன்விரோத தகராறில் தொழிலாளிக்கு கத்திக்குத்து
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

முன்விரோத தகராறில் தொழிலாளிக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
15 Oct 2023 12:06 AM IST

முன்விரோத தகராறில் தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது.

கத்திக்குத்து

கொல்லங்கோடு அருகே உள்ள அடைக்காக்குழி சங்குருட்டி பகுதியை சேர்ந்தவர் றாபி (வயது 46), கூலி தொழிலாளி. இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்வன் (40). இவர் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதை றாபி தட்டிகேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டின் அருகே றாபி நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வன் அவரிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த றாபி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கொல்லங்கோடு போலீசார் செல்வன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்