திருவள்ளூர்
திருத்தணியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலி
|திருத்தணியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தொழிலாளி
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா நீலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 34). இவரது மனைவி மகேஸ்வரி (25). இவர்கள் இருவரும் குருவராஜப்பேட்டை பகுதியில் கூலிக்கு நெசவுத்தொழில் செய்து வந்தனர். நேற்று காலை வழக்கம் போல் இருவரும் குருவராஜப்பேட்டைக்கு வேலைக்கு சென்று உள்ளனர்.பின்னர் இரவு வேலை முடிந்ததும் சிவா தனது மோட்டார் சைக்கிளில் மனைவி மகேஸ்வரியை அழைத்துக் கொண்டு குருவராஜப்பேட்டை - திருத்தணி நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பி கொண்டு இருந்தார்.அப்போது கசவராஜபேட்டை அருகே வரும்போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
பலி
இதில் தலையில் படுகாயமடைந்த சிவா சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த மகேஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருத்தணி போலீசார் சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலை முடிந்து கணவன்- மனைவி இருவரும் வீட்டிற்கு சென்றபோது விபத்தில் கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.